இந்தியா

2 மாதங்களில் ரூ30 ஆயிரம் கோடி முதலீடு சரிவு - வரியை குறைத்தும் இந்தியாவை விட்டு ஓடும் முதலீட்டாளர்கள்

பங்குச்சந்தையின் வரியை குறைத்த போதும் இந்தியாவில் பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை வெளியிற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

2 மாதங்களில் ரூ30 ஆயிரம் கோடி  முதலீடு சரிவு - வரியை குறைத்தும் இந்தியாவை விட்டு ஓடும் முதலீட்டாளர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்சனையை சந்தித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட்டின் சில அறிவிப்புகளால், புதிய முதலீடுகள், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்தியா பெற முடியாததால், இதுவரை 5,486 கோடி ரூபாய் முதலீடு பின்வாங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும், அந்நிய நேரடி முதலீட்டு லாபங்கள் மீதான கூடுதல் சர்சார்ஜ் விதிப்பின் காரணமாக, இந்திய சந்தைகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை விற்று, முதலீட்டாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் குறிப்பாக அந்நிய நேரடி முதலீடு மற்றும் உள்நாட்டு முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தின் மீதான கூடுதல் சர்சார்ஜ் வரிகளை நீக்கினார்.

ஆனாலும் இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தவில்லை என்றே தெரிகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை இந்திய சந்தைகளில் இருந்து குறைத்து வருகின்றனர்.

2 மாதங்களில் ரூ30 ஆயிரம் கோடி  முதலீடு சரிவு - வரியை குறைத்தும் இந்தியாவை விட்டு ஓடும் முதலீட்டாளர்கள்

அதுமட்டுமல்லாது, கடந்த ஆகஸ்ட் 23-ல் இருந்து சுமார் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாயை சந்தையில் இருந்த தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியில் இருந்து அரசு பெறும் 1.76 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார சூழல்களை சரிசெய்யும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஆனால் உலக பொருளாதார சூழலகள் காரணமாக இந்திய சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் நிச்சயம் நீடிக்கத்தான் செய்யும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 1.76லட்சம் கோடி ரூபாயை அரசு பெற்றது, பயனளிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

2 மாதங்களில் ரூ30 ஆயிரம் கோடி  முதலீடு சரிவு - வரியை குறைத்தும் இந்தியாவை விட்டு ஓடும் முதலீட்டாளர்கள்

இந்த மந்த நிலைக்கு உள்ளூர் காரணிகளும், உலக காரணியும் பெரும் பங்கினை வகிக்கிறது. குறிப்பாக அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்த போர் இந்திய பொருளாதாரத்தில் பெருமளவில் எதிரொலிக்கும்.

இதனைக் கணக்கிட்டுதான், உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான மார்க் மொபியஸ், “இந்தியா வரி விகிதங்களில் மாற்றம் கொண்டுவந்து உள்கட்டமைப்பு முதலீடுகளை ஊக்கப்படுத்தவேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.

வரிகளைக் குறைத்தும், அந்நிய நேரடி முதலீட்டாளர்களின் மன நிலை மாறவில்லை என்பது தான் இங்கு தெரிகிறது. இந்த போக்கை முன்பே தவிர்த்திருக்க வேண்டும். பா.ஜ.கவின் தவறான கொள்கையே இந்த சரிவிற்கு காரணம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories