நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான் 2 விண்கலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜூலை 22ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவை நோக்கிச் சீறிப்பாய்ந்த சந்திரயான் 2, நிலவின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக ஆகஸ்ட் 20ம் தேதி நுழைந்து இதுகாறும் சுற்றி வந்தது.
இந்த நிலையில், நேற்று (செப்.,1) மாலை 6.21 மணியளவில் 5வது நிலையைக் கடந்து நிலவின் இறுதி வட்டப்பாதைக்கு சந்திரயான் 2 மாறிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி இன்று தனியாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, திட்டமிட்டபடி செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.55 மணியளவில் சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.