இந்தியா

ரயில் டிக்கெட் ஆன்லைன் பதிவுக்கு இனி சேவைக் கட்டணம் பிடிக்கப்படும் : ரயில்வே துறை அறிவிப்பு!

ஆன்லைன் டிக்கெட் பதிவுக்கான சேவைக் கட்டண முறையை நாளை முதல் மீண்டும் அமல்படுத்துவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் ஆன்லைன் பதிவுக்கு இனி சேவைக் கட்டணம் பிடிக்கப்படும் : ரயில்வே துறை அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு ஏசி இல்லாத வகுப்பு டிக்கெட்டுகளுக்கு ரூபாய் 20ம், ஏசி வகுப்புகளுக்கு ரூபாய் 40ம் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணத்தை ரத்து செய்தது மத்திய அரசு.

இந்த நிலையில், ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்வதற்கான சேவைக் கட்டண முறையை மீண்டும் அமல்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இன்று அதற்கான அறிவிப்பு வெளியானது.

ரயில் டிக்கெட் ஆன்லைன் பதிவுக்கு இனி சேவைக் கட்டணம் பிடிக்கப்படும் : ரயில்வே துறை அறிவிப்பு!

அதில், நாளை (செப்., 01) முதல் ஆன்லைன் டிக்கெட் பதிவுக்கான சேவைக்கட்டண முறை மீண்டும் அமலுக்கு வருகிறது என்றும், ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு ரூ.30ம், ஏசி இல்லாத வகுப்பு டிக்கெட்டுகளுக்கு ரூ.15ம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ.ஆர்.சி.டி.சி வசூலிக்கும் சேவைக் கட்டணம் மட்டுமல்லாமல், டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டியும் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணம் நீக்கப்பட்டதில் இருந்து ரயில்வே துறைக்கு 26 சதவிகிதம் வருவாய் குறைந்ததால் இது மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் வருவாயை கூட்டுவதற்காக மக்களுக்கு சிரமம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என பயணிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories