நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. கடந்த மாதம் 22ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-2 விண்கலம்.
சுமார் 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான் 2 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுவந்த நிலையில், நான்காவது முறையாக மீண்டும் அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 1ம் தேதியன்று மீண்டும் ஒருமுறை சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்படவுள்ளது. அதன் பிறகு சந்திரயான் நிலவில் தரையிறங்கும். திட்டமிட்டது போல் செப்டம்பர் 7ம் தேதி முழுமையாக சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கி விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.