இந்தியா

குடிமக்கள் பதிவேட்டில் (nrc) பெயர் நீக்கப்பட்டதாக வதந்தி: அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட அசாம் பெண்!

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தனது பெயர் இல்லையென வதந்தி பரவியதால் அசாமில் பெண்மணி ஒருவர் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிமக்கள் பதிவேட்டில் (nrc) பெயர் நீக்கப்பட்டதாக வதந்தி: அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட அசாம் பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய மக்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்துக்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதில், 19,06,657 பேரில் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து, குடியுரிமை இல்லாததால் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட நேரலாம் என யூகித்து அசாம் மாநில முழுவதும் துணை ராணுவப்படை மற்றும் போலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சோனிபுட் மாவட்டத்தில் உள்ள தெஸ்புஸ் என்ற பகுதியில், தனக்கு குடியுரிமை இல்லை என பரவிய வதந்தியால் ஷயேரா பேகன் என்ற பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குடிமக்கள் பதிவேட்டில் (nrc) பெயர் நீக்கப்பட்டதாக வதந்தி: அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட அசாம் பெண்!

குடியுரிமை பட்டியலில் இல்லாமல் போனால் வெளிநாட்டவர் என முத்திரை அளிக்கப்படுவோம் என்ற பயத்தினால் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சோனிபுட் போலிஸார் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அவரது குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களின் பெயர் என்.ஆர்.சி. பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களுக்கென 1000 தீர்ப்பாய மையங்கள் அமைக்கப்படுவதாகவும், முதற்கட்டமாக 100 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பாயங்கள் மூலம், தான் இந்திய குடிமகன் என நிரூபித்தால், அவர்களின் பெயர் பட்டியலில் இணைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories