கடந்த கால மோடி ஆட்சியின் போது 2016-ம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து முன்னர் புழக்கத்திலிருந்த 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பின்னர் புதிதாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ஆர்.பி.ஐ அறிமுகப்படுத்தின. இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் பணப்புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சுமார் 14, 400 கோடி அளவிற்கு பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆர்.பி.ஐ நடப்பு நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் 151 மில்லியன் அளவில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை 47 மில்லியன் அளவாக குறைத்துள்ளது. அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 11,692 மில்லியனாக உள்ளது.