இந்தியா

“மக்களுக்கும் லாபம்; அரசுக்கும் வருவாய்” : வரி பாக்கியை வசூலிக்க டெல்லி முதல்வரின் அதிரடி திட்டம்!

தண்ணீர் வரி பாக்கியை செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்.

“மக்களுக்கும் லாபம்; அரசுக்கும் வருவாய்” : வரி பாக்கியை வசூலிக்க டெல்லி முதல்வரின் அதிரடி திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்து வந்தார்.

இந்த நிலையில், மக்களை மேலும் கவரும் வகையிலும், அரசுக்கும் வருமானம் ஈட்டும் வகையிலும் நேற்று மற்றுமொரு புதிய அறிவிப்பை வெளியிட்டு மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கெஜ்ரிவால்.

டெல்லியில் உள்ள குடியிருப்புவாசிகள், தண்ணீருக்கான வரி செலுத்துவதற்கான கட்டணம் 25, 50, 75, 100 என்ற சதவிகிதம் வீதம் தள்ளுபடி செய்யப்படும் என அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்த தள்ளுபடி திட்டம் வருகிற நவம்பர் 30ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், E,F,G,H ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு 100% தள்ளுபடியும், D பிரிவுகளின் கீழ் உள்ளவர்களுக்கு 75%, C பிரிவுகளுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 50%, A,B பிரிவுகளின் கீழ் உள்ளவர்களுக்கு 25% என்ற வரிசையில் நிலுவைத் தொகைக்கான அபராத கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார்.

அதேபோல், குடிநீர் வரிபாக்கிக்கான அபராத கட்டணமும் 100 சதவிகிதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் கெஜ்ரிவால். இருப்பினும் இந்த தள்ளுபடி திட்டம் ஒவ்வொரு பிரிவுகளுக்கு ஏற்றபடி மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

13.5 லட்சம் பேர் டெல்லியில் குடிநீர் வரி பாக்கி வைத்திருப்பதால், கட்டணத்தை செலுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே இந்த தள்ளுபடி திட்டம் கொண்டு வரப்படுகிறது என்றும், இதன் மூலம் அரசுக்கு எவ்வித வருவாய் நெருக்கடியும் ஏற்படாமல், ரூ.600 கோடி அளவில் வருமானம் கிடைக்கும் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories