இந்தியா

பொருளாதார சரிவு: நிதியமைச்சகத்தை சீண்டிய பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்; என்ன செய்ய போகிறார் நிர்மலா?

இந்தியா பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருவதாகவும், மிகப்பெரும் சீர்திருத்தம் தேவைப்படும் எனவும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான ஷமிகா ரவி தெரிவித்துள்ளார்.

பொருளாதார சரிவு: நிதியமைச்சகத்தை சீண்டிய பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்; என்ன செய்ய போகிறார் நிர்மலா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான ஷமிகா ரவி, இந்தியா பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ட்விட்டரில் பொருளாதார தேக்க நிலை குறித்த ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஷமிகா ரவி, “இந்தியா தற்போது பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. இதனைச் சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து, தேசிய வளரச்சித் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.

பொருளாதாரத்தை சீர்படுத்த பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படும்; வெறும் ஒட்டுவேலைகள் பயன்தராது. பொருளாதார வீழ்ச்சியை நிதியமைச்கத்திடம் மட்டும் விட்டுவிடுவது, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியையும் கணக்குகள் துறையிடம் ஒப்படைப்பது போன்றதாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஷமிக்காவின் இந்த பதிவில் நிதித் துறை பற்றி விமர்சித்திருப்பது, முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். நாட்டின் நிதியமைச்சகத்தால், மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டு விடாது என்பதே அவர் கூறியதன் சாராம்சம். வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம், 5 டிரில்லியன் டாலர் ஜி.டி.பியே இலக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காற்றில் மட்டுமே படம் வரைந்து கொண்டிருக்கிறார் என்பதை ஷமிக்காவின் பதிவு. மேலும், பொருளாதார ஆலோசனைக் குழுவுக்கும், நிதியமைச்சகத்துக்கு இடையே முரண்பாடுகள் இருக்கின்றதா என்ற கேள்வியும் ஷமிக்காவின் இந்த பதில் சந்தேகம் கிளப்புகிறது.

முன்னதாக, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், “கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது இந்தியா” எனக் குறிப்பிட்டுக் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளும் இந்தியாவில் அதிபயங்கரமான பொருளாதாரச் சீர்கேடு ஏற்பட்டிருப்பதை உணர்த்துகின்றன. எனவே, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியாவை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories