இந்தியா

நீரின்றி தவிக்கும் ராஜஸ்தான் பாலைவன மாவட்டங்களுக்கு கூடுதல் இலவச குடிநீர் : காங். முதல்வர் அறிவிப்பு!

பாலைவன மாவட்டங்களில் உள்ள மக்களின் பயன்பாட்டுக்காக கூடுதல் இலவச குடிநீர் வழங்குவதாக அறிவித்துள்ளது ராஜஸ்தான் அரசு.

நீரின்றி தவிக்கும் ராஜஸ்தான் பாலைவன மாவட்டங்களுக்கு கூடுதல் இலவச குடிநீர் : காங். முதல்வர்  அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது.

ஆகையால் கிடைக்கும் தண்ணீரை கேன்களிலும், ட்ரம்களிலும் நிரப்பி, சிக்கனமாகப் பயன்படுத்தி வரும் அம்மாநில மக்கள், தண்ணீர் ட்ரம்களுக்கு பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் காங்கிரஸின் அசோக் கெலாட், புதிதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீரின்றி தவிக்கும் ராஜஸ்தான் பாலைவன மாவட்டங்களுக்கு கூடுதல் இலவச குடிநீர் : காங். முதல்வர்  அறிவிப்பு!

அதில், ராஜஸ்தானில் உள்ள 30 மாவட்டங்களில் 13 பாலைவன மாவட்டங்களில் நீர் வறட்சி தலைதூக்கியுள்ளது. அதனைத் தீர்க்கும் வகையில் தனிநபர் ஒருவருக்கு 40 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அதனை உயர்த்தி, 13 பாலைவன மாவட்டங்களில் உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் 70 லிட்டர் இலவச தண்ணீர் வழங்கப்படும் என அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

மேலும், வறட்சி நிவாரணம் அளிப்பதற்காக நிதித்துறையின் குடிநீர் கட்டண திருத்தத்துக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

banner

Related Stories

Related Stories