இந்தியா

2020-க்கான நீட் தேர்வு தேதிகள் அறிவிப்பு... நீட் விலக்கு விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது அ.தி.மு.க அரசு?

2020ம் ஆண்டு மே 3ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் எனவும், ஜூன் 4ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2020-க்கான நீட் தேர்வு தேதிகள் அறிவிப்பு... நீட் விலக்கு விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது அ.தி.மு.க அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2020ம் ஆண்டு மே 3ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

2020 மார்ச் 27ம் தேதி தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றும், தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

+2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நடப்பாண்டில் +2 தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். தனித் தேர்வர்கள் மற்றும் திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கடந்த கல்வியாண்டில் 14.10 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் 7,97,042 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,23,078 பேர் எழுதிய நீட் தேர்வில், 59,785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் வெகு சொற்பமான மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இயலாத நிலைக்கு ஏழை எளிய மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து ஆண்டுக் கணக்கில் படிக்க வசதியற்ற ஏழைப் பிள்ளைகள் மருத்துவப் படிப்புக் கனவு நிறைவேறாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோகும் நிலை உள்ளது.

ஏழை எளிய குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவன் கனவைக் குழிதோண்டிப் புதைக்கும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் அதில் அரசியல் செய்து வருகின்றன. இந்நிலையில் தான், தற்போது அடுத்தாண்டுக்கான நீட் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories