இந்தியா

ஜெகன்மோகன் ரெட்டி என் வீட்டை மூழ்கடிக்க சதி செய்தார் - ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கோபம் !

அணைகளில் இருந்து நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றி என் வீட்டை தண்ணீரில் மூழ்கடிக்க முயற்சி செய்தனர் என்று ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி என் வீட்டை மூழ்கடிக்க சதி செய்தார் - ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கோபம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணா நதிக்கரையில் அருகில் வசித்து வந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 39 பேரின் வீடுகளை காலி செய்யக்கூறி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், அணைகளில் இருந்து நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றி என் வீட்டை தண்ணீரில் மூழ்கடிக்க முயற்சி செய்தனர் என்று ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு என் வீட்டை வெள்ளத்தில் மூழ்கடிக்க முயற்சி செய்தது. ஆனால் என் வீடு மூழ்கவில்லை. இந்த வெள்ளப்பெருக்கு சாதாரணமாக ஏற்பட்டது அல்ல. அணைகளில் இருந்து தண்ணீரை முன்னதாகவே வெளியேற்றி இருந்தால் இந்த அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

என் வீட்டை மூழ்கடிக்க வேண்டும் என்பதற்காக அணைகளில் இருந்து தண்ணீரை ஒரே நேரத்தில் வெளியேற்றியுள்ளனர். வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் அமைச்சர்கள் என் வீட்டை சுற்றிவந்தபடி இருந்தனர் என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளும்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories