பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக மத்தியில் பதவியேற்றதை அடுத்து தொடர்ந்து பல சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, புதிய யூனியன் பிரதேசம், முத்தலாக் தடை சட்டம் என பல சட்டத்திருத்தங்களை இயற்றி வருகிறது.
இதனையடுத்து, இடஒதுக்கீடு தொடர்பாக ஆதரவு, எதிர்ப்பு தெரிவிப்போர் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் என டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி ஆர்.எஸ்.ஏஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு பா.ஜ.க-வினரை தவிர பலர் எதிர்ப்புகளையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இடஒதுக்கீடு குறித்த மோகன் பகவத்தின் பேச்சும், நோக்கமும் நாட்டுக்கு ஆபத்தானவை என உத்தர பிரதேச காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதை யூகித்து பார்த்தால் இடஒதுக்கீட்டை நீக்குவதற்கு பா.ஜ.க அரசு திட்டமிட்டிருப்பது போன்றே உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தான் மக்கள் எப்படி இதனை ஏற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.