இந்தியா

கடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை : கண்டுகொள்ளாத மோடி அரசு - 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் !

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவினால் முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்துவதாக வெளிப்படையாக அறிவித்து வருகிறது.

கடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை : கண்டுகொள்ளாத மோடி அரசு - 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய தொழில் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு துறை. இந்த துறையில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்ப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டு ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தன. ஆனால் 2018ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்தது. அதனால் புதிய முதலீடுகள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனத் திட்டங்களில் மட்டுமே இருக்கவேண்டும் என மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

மிகக் குறுகிய காலகட்டத்திலேயே சுசூகி, மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவன பங்குகள் 20 சதவீத அளவிற்கு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 2019ம் ஆண்டு மே மாதம் வரை சுமார் 42 பில்லயன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரத்து 905 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை : கண்டுகொள்ளாத மோடி அரசு - 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் !

மேலும் நடப்பு நிதியாண்டில் 18.4 சதவீத அளவிற்கு வாகன விற்பனை எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும்இ இது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கான வர்த்தக பேரிழப்பு எனவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் இந்திய அளவில் முன்னணி நிறுவனமான சுந்தரம் - கிளேட்டன் நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னையை அடுத்த பாடியில் இயங்கி வருகிறது. வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக சுந்தரம் - கிளேட்டன் நிறுவனம் பாடியில் உள்ள ஆலையை இரண்டு நாட்களுக்கு மூடப்போவதாக கடந்த வாரம் அறிவித்தது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது, இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக சென்னையில் உள்ள இருங்காட்டுக்கோட்டை சில துறையில் ஒருநாள் உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகூறுகையில், “ஆட்டோமொபைல் சந்தை இறக்கமான நிலையில் இருப்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது” என்று தெரிவித்தார்.

கடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை : கண்டுகொள்ளாத மோடி அரசு - 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் !

மேலும் முக்கிய நிறுவனங்களே தங்களுடைய உற்பத்தியை நிறுத்தும் போது சிறு நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தும் அபாயம் உருவாகும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஆளும் அ.தி.மு.க அரசோ, தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோனாலும் பரவாயில்லை ஆனால், பா.ஜ.க-விற்கு காட்டிவரும் விசுவாசத்தை காட்ட, இந்த தொழில் வீழ்ச்சி குறித்து வாயே திறக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது என்ற செய்தியை குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் அதில் கூறியிருப்பதாவது, “இது ஒரு எச்சரிக்கை குறியீடு, தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதனால் மத்திய அரசு அந்த துறையைப் பாதுகாக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் இந்த ட்விட்டர் பதிவு அ.தி.மு.க - பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதே நிலை தொடர்ந்து நீடித்தால் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழக்கும் சூழல் ஏற்படும் என்று பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories