காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பத்தாண்டு காலம் நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் டாக்டர் மன்மோகன் சிங். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னராக பதவி வகித்த பொருளாதார வல்லுனரான மன்மோகன் சிங், நிர்வாகத்திறன்மிக்க ஆளுமையாக திகழும் அவர் ராஜ்யசபா உறுப்பினராக அசாம் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து தேர்வாகி வந்தார்.
கடந்த 1991 முதல் 2019 வரை தொடர்ந்து 5 முறை அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.
இந்த நிலையில், இந்தமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு அவர் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார். ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கேலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட் ஆகியோர் முன்னிலையில் இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மாநில சட்டசபை சபாநாயகரிடம் வேட்புமனுவை அளித்தார்.
தற்போது ஆறாவது முறையாக ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்படும் டாக்டர் மன்மோகன் சிங், 2024-ம் ஆண்டு ஏப்ரல் வரை ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை வகிப்பார்.