இந்தியா

கார் கதவில் சிக்கி துண்டானது பா.ஜ.க அமைச்சரின் ‘கை விரல்’ : திருட்டுப்போன ராசியான ‘தங்க மோதிரம்’

உத்திர பிரதேச அமைச்சர் ஸ்வதந்தரா தேவ் சிங்  கைவிரல், காரில் சிக்கி துண்டானது. இதில் அவரது ராசியான மோதிரமும் களவாடப்பட்டது. 

கார் கதவில் சிக்கி துண்டானது பா.ஜ.க அமைச்சரின் ‘கை விரல்’ : திருட்டுப்போன ராசியான ‘தங்க மோதிரம்’
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

உத்திரபிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்தரா தேவ் சிங் மாநிலத்தின் அமைச்சராகவும் பதவிவகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை முசாபர் நகரில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள தனது காரில் சென்றார். அவரைப் பார்த்தவுடன், மாலைகளுடன் வரவேற்க காத்திருந்த கூட்டம் அவரை நெருங்கி வந்தது.

அப்போது, அவர் காரில் இருந்து இறங்குவதற்குள் கூட்டம் நெருக்கியதால் அவரது வலது கை சுண்டு விரல் காரின் கதவில் சிக்கிக் கொண்டது. அவர் வலி தாங்க முடியாமல் அலறும் போது காரின் கதவு எதிர்பாராக விதமாக மூடியதால் அவருடைய சுண்டு விரல் துண்டானது.

வலியால் துடித்த அவர் தனது விரலை காணாமல் தேடினார். ஒரு வழியாக கூட்ட நெரிசலில் இருந்து கீழே கிடந்த விரலை தொண்டர் ஒருவர் எடுத்து தந்தார். அந்த சுண்டுவிரலில் இருந்த ராசியான தங்க மோதிரம் களவாடப்பட்டிருந்தது.

தனது ராசி மோதிரத்தை தேடிப்பார்த்தும் கிடைக்காததால், விரல் கிடைத்தால் போதும் என்று அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்ற தேவ் சிங்கிற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. துண்டான விரலை 2 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்தும் பொறுத்த முடியவில்லை என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

banner

Related Stories

Related Stories