ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மோடி அரசு கொண்டு வந்தது. அது மட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையே சிதைக்கும் விதத்தில் இரண்டாக பிரித்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் “ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019”யையும் அராஜகமான முறையில் நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பலத்தை பயன்படுத்தி நிறைவேற்றியது.
முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையே ராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெறி சிறைச்சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் காஷ்மீர் மக்களின் அன்பைப் பெற்ற தலைவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.
அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்துவிட்டு, மக்கள் நிம்மதிக்காகவும், வழக்கமான நடைமுறை வாழ்க்கையை வாழ்வதாக பொய்யை பா.ஜ.க அரசியல் கட்சி தலைவர்கள் சரளமாக பேசிவருகின்றனர். எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மக்களுடன் சகஜமாம உணவு உண்ணுவதாக நடிகர்களை வைத்து வீடியோ தயாரிக்கும் வேலையை செய்து வருகிறது. பா.ஜ.க.,வின் இந்த செயல் சமீபத்தில் ஊடங்கள் வெளியே அம்பலமானது.
மேலும் அரசுக்கு எதிராக போராடுபவர்களை பா.ஜ.க அரசு சிறையில் தள்ளுவதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் செய்திகள் வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகர் பல்போரா பகுதியைச் சேர்ந்த ஒசைப் அல்டஃப் என்ற 17 வயதுச் சிறுவன் கடந்த 5ம் தேதி 13 பெல்லட் குண்டுகள் உடலில் பாய்ந்து உயிரிழந்ததாகவும் தகவலும் வெளிவந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆங்கில நாளேடான வையர் காஷ்மீர் குறித்து வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளது. அதில், அம்மாநில இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராடிய போது அவர்களை விரட்ட இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த தாக்குதலில் காயமான இளைஞர்களுக்கு கண்கள் பாதிப்படைந்தள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் படிக்கும் மாணவர்களும் இதில் பாதிப்படைந்திருப்பதாக அவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கண் பார்வை திறனை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.