இந்தியா

மருத்துவ மசோதாவுக்கு கண்டனம் : வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

மத்திய அரசு தாக்கல் செய்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ மசோதாவுக்கு கண்டனம் : வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து சட்ட திருத்த மசோதாக்களை தங்கள் தோவைக்கு ஏற்றார் போல் மாற்றி அதை நிறைவேற்றும் வேலையை மூர்க்கத்தனமாக செய்து வருகிறது. இந்நிலையில் 63 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலை மாற்றி தேசிய மருத்துவ கமிஷன் என்ற ஒற்றை அதிகார அமைப்பைக் கொண்டுவர முயற்சி செய்து மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

குறிப்பாக முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு நெகஸ்ட் எனப்படும் தேசிய அளவிலான தேர்வு நடத்த வழிவகைச் செய்கிறது. இந்த மசோதாவை கடந்த 29ம் தேதி மத்திய பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றியது.

அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஜூலை 1ம் தேதி தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பபடும். குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின் சட்டமாகும் என கூறப்படுகிறது.

மருத்துவ மசோதாவுக்கு கண்டனம் : வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

இந்த நிறைவேற்றப்பட்ட சட்டம் அமுல்படுத்தினால் இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டும். அதன் பிறகு அதற்கு பதிலாக கொண்டவர இருக்கும் தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கப்படும். அதனால் முன்பு அறிவித்த படி மூன்று ஆண்டுகளில் நெக்ஸ்ட் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த புதிய சட்ட மசோதா மக்களை சிரமத்திற்குள் தள்ளும் மேலும், மாணவர்கள் கனவு பாதிக்கப்படும் என கூறி ஐ.எம்.ஏ - இந்திய மருத்துவர்கள் சங்கம் ஜூலை 2ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, சப்தார் ஜங் மருத்துவமனை, டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மற்றும் தமிழகத்தில் பல மருத்துவமனையில் ஏராளமான மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் இன்று பல இடங்களில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய மசோதா குறித்த எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தை ஈடுபடுவோம் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories