இந்தியா

மாநில அந்தஸ்தை இழந்து 2 யூனியன் பிரதேசமாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர் - லடாக்!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அந்தஸ்தை இழந்து 2 யூனியன் பிரதேசமாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர் - லடாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்கப்படும் என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனையடுத்து சட்டம் நீக்கப்படுவதற்கான அறிவிப்பு இப்போது முதலே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநில அந்தஸ்தை இழந்து 2 யூனியன் பிரதேசமாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர் - லடாக்!

இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அசையா சொத்துகளை வாங்க வழிவகுக்கும். இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அதில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையும் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பிராந்தியம் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அந்தஸ்தை இழந்து 2 யூனியன் பிரதேசமாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர் - லடாக்!

இந்த அறிவிப்பை அடுத்து மத்திய அரசின் இந்த அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories