இந்தியா

பாகிஸ்தானியர்களின் உடலை வெள்ளைக்கொடியுடன் எடுத்துச் செல்லுங்கள்: பாக்.ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி

இந்திய எல்லையில் ஊடுருவியதால் சுட்டுக்கொல்லப்பட்ட 7 பாகிஸ்தானியர்களின் உடலை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் அனுமதியளித்துள்ளது.

பாகிஸ்தானியர்களின் உடலை வெள்ளைக்கொடியுடன் எடுத்துச் செல்லுங்கள்: பாக்.ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பதாக தகவல் வந்ததில் அடிப்படையில் இந்திய பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த தீவிரவாதிக்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். முன்னதாக சோபியான் மாவட்டத்தின் பந்துஷான் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிர தேடுதல் வேட்டைத் தொடங்கியது. அப்போது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த மன்சூர் பாத் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

அதனையடுத்து தொடர்ச்சியாக மீமந்தர் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த ஜீனத் உல் இஸ்லாம் நைகூவும், குப்வாரா மாவட்டம் கெரன் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் எல்லை அதிரடி படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது வரை 7 தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லை கிராமப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவமும் சிறிய ரக குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட 7 பாகிஸ்தானியர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் செல்ல , பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் அனுமதியளித்துள்ளது. மேலும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories