இந்தியா

தவறான பொருளாதாரக் கொள்கைகள் - உலகப் பொருளாதார பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டது இந்தியா

உலகவங்கி வெளியிட்டுள்ள உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

தவறான பொருளாதாரக் கொள்கைகள் - உலகப் பொருளாதார பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டது இந்தியா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலக வங்கி ஆண்டுதோறும் உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், 2018ம் ஆண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2017ம் ஆண்டில் 5ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது வந்துள்ள பட்டியலில் 2 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 7ம் இடத்தில் உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) அடிப்படையிலே உலக வங்கி இப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி வரிசையாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு இந்தியாவின் ஜி.டி.பி அதிகமாக இருந்தாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவில் சரிவும், மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் தான், இந்தியா பின்தங்க காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories