இந்தியா

14 ஆண்டுகளில் முதன்முறையாக நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் - ஜியோவால் சரிந்த சாம்ராஜ்யம்!

தொலை தொடர்பு துறையில் கொடிகட்டி பறந்துவந்த ‘ஏர்டெல்’ நிறுவனம் 14 வருடத்தில் முதன்முறையாக நஷ்டத்தை சந்தித்துள்ளது.

14 ஆண்டுகளில் முதன்முறையாக நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் - ஜியோவால் சரிந்த சாம்ராஜ்யம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய தொலைத்தொடர்பு துறையில், கொடிகட்டி பறந்துவந்த ஏர்டெல் நிறுவனம் சில ஆண்டுகளாக கடுமையான வர்த்தக தேக்க நிலையை சந்தித்து வருகிறது. அதன் விளைவாக, அந்நிறுவனம் 14 வருடத்தில் முதன்முறையாக நஷ்டத்தை சந்தித்துள்ளது.

14 ஆண்டுகளில் முதன்முறையாக நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் - ஜியோவால் சரிந்த சாம்ராஜ்யம்!

2019-2020ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் இந்திய வர்த்தகத்தில் சுமார் ரூ. 15,344.6 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டை காட்டிலும் 0.7 அதிகம். இதுவே, கடந்த ஆண்டு முதல் காலாண்டு வருமானம் 3 சதவிகிதம் அதிகம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 97 கோடி ரூபாயை லாபம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு காலிறுதியில் 2,866 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

அதேநேரத்தில், 2019-2020ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜியோ நிறுவனம் ரூ.11,679 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டை காட்டிலும் 5.1 சதவிகிதம் அதிகம்.

14 ஆண்டுகளில் முதன்முறையாக நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் - ஜியோவால் சரிந்த சாம்ராஜ்யம்!

ஏர்டெல்லின் இந்த நஷ்டத்திற்கு முகேஷ் அம்பானியின் ‘ஜியோ’ நிறுவனம் தான் காரணம் என்றால் யாராலும் மறுக்க முடியாது. ‘ஜியோ’ டேட்டா ஆயுதத்தை கொண்ட ராட்சசனாக இந்திய தொலை தொடர்பு துறைக்குள் நுழைந்தது ஜியோ. டிராய் விதி முறைப்படி முதல் 3 மாதங்கள் மட்டுமே இலவசங்கள் வழங்க முடியும். ஆனால், ஜியோ 6 மாதங்களுக்கு இலவச சேவை வழங்கியது. மேலும், காலர் டியூன், மிஸ்டு கால் அலர்ட், ரோமிங் உள்ளிட்டவைகளை சேவைகளையும் இலவசமாக்கியது. இதனால் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை அள்ளியது ஜியோ. பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடாஃபோன், போன்ற நிறுவனங்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை இன்னமும் தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் பயனர்கள் 2ஜி மற்றும் 3ஜி ஆகியவற்றில் இருப்பதால் பல நெட்வொர்க்குகளை நிர்வகிப்பதற்கான செலவை ஏர்டெல் ஈடுகட்ட வேண்டும். இது குறுகிய காலத்தில் ஏர்டெல்லின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜியோவை பொறுத்தவரையில் வெறும் 4ஜி சேவை மட்டும் தான் என்பதால், அந்த செலவுகள் குறைவே.

‘ஜியோ’ என்ற ஒற்றை கார்ப்பரேட் நிறுவனத்துக்காக, அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் பலி கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முன்னணி நெட்வொர்க்காக இருந்த ஏர்டெல் நிறுவனம், மோடி அரசின் கார்ப்பரேட் வெறிக்கு பலி கடாவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories