இந்தியா

உன்னாவோ சிறுமியை கொல்ல முயற்சி... மோடி அரசு மக்களை பாதுகாக்கும் அரசாக இல்லை... நாராயணசாமி குற்றச்சாட்டு!

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாக மோடியின் மத்திய அரசு செயல்படவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

உன்னாவோ சிறுமியை கொல்ல முயற்சி... மோடி அரசு மக்களை பாதுகாக்கும் அரசாக இல்லை... நாராயணசாமி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவோ சிறுமி மற்றும் உறவினர்கள் சென்ற கார் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பாலியல் கொடுமை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குல்தீப் சிங் செங்காரை பதவி நீக்கம் செய்யாத உத்தர பிரதேச மாநில பா.ஜ.க அரசைக் கண்டித்தும் சமூக விரோத மற்றும் மக்களுக்கு எதிரான செயல்களுக்கு துணைப்போகும் மத்திய அரசைக் கண்டித்தும் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, “மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாகவும், கட்சியாகவும் பா.ஜ.க. செயல்படவில்லை” என குற்றஞ்சாட்டினார்.

banner

Related Stories

Related Stories