இந்தியா

''இனி ஆந்திராவில் கல்வி வியாபாரம் இல்லை'':கல்வியை ஒழுங்குபடுத்த மசோதாவைத் தாக்கல் செய்த ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அம்மாநில சட்டமன்றத்தில் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தாக்கல் செய்துள்ளார்.

''இனி ஆந்திராவில் கல்வி வியாபாரம் இல்லை'':கல்வியை ஒழுங்குபடுத்த மசோதாவைத் தாக்கல் செய்த ஜெகன்மோகன் ரெட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து மற்ற மாநில அரசுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் பல்வேறு அசத்தலான, அதிரடியான உத்தரவுகளை அறிவித்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு போலீசாருக்கும் சுழற்சி முறையில் கட்டாய வார விடுமுறை, சுகாதாரத்துறையில் உள்ள ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10,000 ஆகச் சம்பள உயர்வு, ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வந்து வழங்கப்படுதல் என்பவை உள்ளிட்ட பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி.

அந்த வரிசையில், பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தனியார்ப் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் போன்றவை அந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாக உள்ளது. மேலும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கப்படும்.

சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ``நம் சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் பலர் சொந்தமாகப் பள்ளி, கல்லூரிகள் வைத்துள்ளனர். அவற்றில் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே இம்மசோதா கொண்டு வரப்பட்டது” எனத் தெரிவித்தார்.

பின்னர் இந்த மசோதா குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஜெகன்மோகன் ரெட்டி, கல்வி என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு சேவை. ஏழை மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறந்த கல்வியைத் தரப்போகிறோம். உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் செயல்பட்ட கமிஷன், பள்ளி, கல்லூரிகளின் கட்டணம் மற்றும் கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த கல்வி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories