எஸ்.பி.ஐ. வங்கியின் க்ளார்க் பணியாளர்களுக்கான பிரிலிம்ஸ் தேர்வு கடந்த ஜூன் மாதம் 22,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வுகளின் முடிவுகள் நேற்று www.sbi.co.in என்ற எஸ்.பி.ஐயின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மத்திய பா.ஜ.க அரசின் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10 % இடஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.
இதன் மூலம் 10% பொருளாதார இட ஒதுக்கீடு பெறும் உயர் சாதியினர்கள் 28 கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுத்திருந்தாலே அடுத்த நிலைக்கு தேர்ச்சி பெற்றனர் என்றும், ஓ.பி.சி மற்றும் பொதுப்பிரிவினர் 61.25 மதிப்பெண்களும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 53.75 மதிப்பெண்களும் கட் ஆஃப் மதிப்பெண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் அவர்கள் மெயின் தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண்ணும், இதர பிரிவினருக்கு அதிக கட் ஆஃப் மதிப்பெண்களும் நிர்ணயித்திருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த தேர்ச்சி முறைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ” பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 61.25 மதிப்பெண்களை நிர்ணயித்துவிட்டு, முன்னேறிய வகுப்பினருக்கு எளிதில் தேர்ச்சியளிப்பதன் மூலம் சமூக நீதியை பா.ஜ.க. அரசு படுகுழியில் தள்ளியிருப்பதையே வெளிப்படுத்தியுள்ளது” என தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து, இந்து மதத்தை போற்றுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் தாங்கள் இருப்பாதாக வாய்ச்சவடால் விட்டு மக்களை ஏமாற்றி வருவதாக மோடி அரசை மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பிராமணர்களுக்கு மட்டுமே உதவி செய்து விட்டு மற்ற இந்து மக்களுக்கு பா.ஜ.க துரோகம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலான புகார்கள் எழுந்து வருகின்றன. ட்விட்டரில் #BJPBetraysHindus (இந்துக்களுக்கு துரோகம் செய்தது பா.ஜ.க) என்ற ஹேஷ்டேக் தற்போது உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
அவற்றில் இருந்து சில பதிவுகள்...