இந்தியா

'ஜெய் ஸ்ரீ ராம்' போர்க் குரலாகிவிட்டது; எதிர்காலம் கவலையளிக்கிறது - மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள்!

நாட்டில் அதிகரித்து வரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

'ஜெய் ஸ்ரீ ராம்' போர்க் குரலாகிவிட்டது; எதிர்காலம் கவலையளிக்கிறது - மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அடூர் கோபாலகிருஷ்ணன், மணி ரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்பட 50 திரை பிரபலங்கள் கூட்டாக சேர்ந்து நீண்ட கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில், ” நாட்டில் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, அர்பன் நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. எந்த ஒரு குடிமகனும் தமது சொந்த தேசத்தில் உயிர் அச்சத்துடன் வாழக் கூடாது.

'ஜெய் ஸ்ரீ ராம்' போர்க் குரலாகிவிட்டது; எதிர்காலம் கவலையளிக்கிறது - மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள்!

மதவெறுப்புகளால் வன்முறைகளை நிகழ்த்துவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியட்ட தகவல்படி, 2016 ஆம் ஆண்டு மட்டும் இதைப் போன்ற 840 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவை குறித்து சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

'ஜெய் ஸ்ரீ ராம்' போர்க் குரலாகிவிட்டது; எதிர்காலம் கவலையளிக்கிறது - மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள்!

இதுகுறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளி வர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வருந்தத்தக்க வகையில், "ஜெய் ஸ்ரீ ராம்" இன்று ஒரு போர்க்குரலாக மாறியுள்ளது.

இது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்கிற கோஷம் தான் பல வன்முறைகளுக்குத் தூண்டுகோளாக இருந்து வருகிறது. ராம் என்கிற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அப்படியிருக்க, அப்பெயர் வன்முறைக்காக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்பது தேசத்தை விமர்சிப்பதாகாது. ஆளுங்கட்சியும் ஒரு அரசியல் கட்சி என்கிற புரிதல் வேண்டும். எனவே, அரசுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்து, தேசத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்தாக பார்க்கக் கூடாது.

எதிர் வாதங்களையும் கேட்கும் சூழல் இருக்க வேண்டும். அதுவே இன்னும் வலுவான தேசத்தை கட்டியமைக்க உதவும். எங்களின் கோரிக்கைகள் சரியான முறையில் பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறோம். இந்தியர்களாக இந்நாட்டின் எதிர்காலம் குறித்து நாங்களும் கவலைப்படுகிறோம்” இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories