இந்தியா

இந்திய விமானப்படை உருவாக்கியுள்ள 'வார் கேம்' - ஹீரோவாக அபிநந்தன்!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய விமானப்படை புதிய மொபைல் கேம் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்திய விமானப்படை உருவாக்கியுள்ள 'வார் கேம்' - ஹீரோவாக அபிநந்தன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளின் முகாம் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் விமானம், இந்திய எல்லைக்குள் நுழைந்தது.

அதனை விரட்டிச் சென்ற இந்திய விமானம் எதிர்பாராத விதமாக இந்திய விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தை இயக்கிய இந்திய பைலட் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. இதையடுத்து பல்வேறு நாடுகளின் கடும் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் விங் கமாண்டர் அபிநந்தனை 2 நாட்களில் விடுவித்தது.

இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு இந்திய மக்கள் ஏகோபித்த வரவேற்பும் ஆதரவும் தெரிவித்தனர். பலரும் அபிநந்தனின் மீசையை போன்று தாங்களும் வைத்துக்கொண்டனர். அவரது மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய விமானப்படையின் செயல்பாடுகளை வெளிக்காட்டும் வகையில் மொபைல் கேம் ஒன்றை வெளியிட இந்திய விமானப்படை திட்டமிட்டு உள்ளது. இந்த கேம் குறித்த டீசரை இந்திய விமானப்படை தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு நிமிடம் 41வினாடிகள் ஓடும் அந்த டீசரில் போர் விமானி ஒருவர் சண்டையிடுகிற காட்சி இருக்கிறது. இந்த மொபைல் கேமில் இந்திய விமானப்படையின் ஹீரோவாக புகழப்பட்ட அபிநந்தன் போன்ற கதாபாத்திரம் ஒன்று தான் ஹீரோவாக உள்ளது.

பல வகையான விமானங்களை பயன்படுத்தி எதிரிகளுடன் சண்டையிடுவது போன்று இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விளையாட்டை வரும் 31 ம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இப்போது வெளிவரும் இந்த விளையாட்டு ஒருவர் விளையாடும் வகையில் உள்ளது. அதற்கடுத்து வரவுள்ள அப்டேட்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து விளையாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் இந்திய விமானப்படையில் இடம் பெற்றிருக்கும் போர விமானங்களை இயக்கி விளையாடலாம், என்பதால் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories