ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் தனியாக பிரிந்ததால் அமராவதி என்ற இடத்தில் ஆந்திராவின் தலைநகர் கட்டமைப்பதற்கு முந்தைய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டது.
அமராவதி திட்டத்திற்கு உலக வங்கி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்து இருந்தது. அமராவதி திட்டத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி 200 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க சம்மதித்து இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அமராவதி நகரை கட்டமைக்கும் திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதை உலக வங்கி திடீரென கைவிட்டுள்ளது. காரணம் எதுவும் குறிப்பிடாமல் உலக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி நகர் கட்டமைக்கும் திட்டத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. இதனால் அமராவதி திட்டம் கைவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கு தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்ன மாற்று ஏற்பாடு செய்வார், இதை எப்படி சமாளிப்பார் என்று ஆந்திர அரசியலில் கேள்விகள் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.