உத்தர பிரதேச மாநிலம் ஜாகன்ஹிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹே ஆலம். அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு ருக்சனா பனோ என்கிற பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜூலை 13ம் தேதி காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வரதட்சணையாக மணமகன் வீட்டார் இருசக்கர வாகனம் கேட்டுள்ளனர்.
பெண் வீட்டாரும் இருசக்கர வாகனம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதை அடுத்து திருமணம் நடைபெற்றது. ஆனால், சில குடும்ப சூழல் காரணமாக வரதட்சணை கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷாஹே ஆலம், திருமணமான 24 மணி நேரத்தில் ருக்சனாவுக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
இதனால், மணப்பெண்ணும், பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து, பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் ஆலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை முடிவடைந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.