இந்தியா

சரியாக மாடு மேய்க்காத 8 அதிகாரிகள் சஸ்பெண்ட் - உத்தர பிரதேச முதல்வர் யோகி கொடுத்த ‘ஷாக்’... !

பசு பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக 8 அதிகாரிகளை உத்தரப் பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சரியாக மாடு மேய்க்காத 8 அதிகாரிகள் சஸ்பெண்ட் - உத்தர பிரதேச முதல்வர் யோகி கொடுத்த ‘ஷாக்’... !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உத்தரப் பிரதேச மாநிலம் பிராயாக்ராஜ் பகுதியில் உள்ள அரசு கோசாலைகளில் அண்மையில் நோய் தாக்குதலால் 35 பசுமாடுகள் உயிரிழந்தன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைவர்களுடன் காணொலியில் உரையாற்றிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கோசாலை பராமரிப்பில் அலட்சியம் காட்டிய 8 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

கால்நடைகள் மற்றும் தங்குமிடங்களை பராமரிப்பதில் திறமையின்மை இருப்பதாகக் கூறி மாவட்ட நீதிபதி உட்பட மூன்று அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். எதிர்காலத்தில் பசு பராமரிப்பில் அரசு ஊழியர்கள் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் ஆதித்யநாத் கூறியுள்ளார். மீறினால் கால்நடை பராமரிப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சரின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இது குறித்து பேசிய பா.ஜ.க.,வின் மனேஜ் மிஸ்ரா, “ பசுக்கள் பாதுகாப்புக்கு உ.பி அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது; ஆதித்யநாத் ஆட்சியில் அவை ஆரோக்கியமாக இருப்பதுடன் நல்ல உணவும் கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories