இந்தியா

சந்திரயன் 2 கவுண்டவுன் திடீரென நிறுத்திவைப்பு: மற்றொரு நாள் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயன் 2 விண்ணில் செலுத்தப்படவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயன் 2 கவுண்டவுன் திடீரென நிறுத்திவைப்பு: மற்றொரு நாள் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் விண்ணில் செல்வதற்கு தயாராகிவிட்டது சந்திராயன் 2.

சுமார் 603 கோடி ரூபாய் செலவில், 2370 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 விண்கலம், நாளை அதிகாலை (ஜூலை 15) 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 20 மணிநேர கவுண்ட் டவுன் நேற்றுக்காலை 6.51க்கு தொடங்கியது.

வெப்பநிலையை ஆய்வு செய்யக்கூடிய கருவிகள், அதிநவீன கேமிராக்கள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடிய கருவிகள் என சந்திராயன் 2 விண்கலத்தில் 13 வகையான நவீன கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

மேலும், நாசாவின் Retro Reflector என்ற கருவியும் சந்திராயனுடன் நிலவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திராயன் 2 விண்கலம் செப்டம்பர் மாதம், 6ம் தேதி நிலவை சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயன் 2 கவுண்டவுன் திடீரென நிறுத்திவைப்பு: மற்றொரு நாள் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு!

இந்நிலையில், சில நிமிடங்களில் விண்ணில் ஏவப்பட இருந்த சந்திரயன் 2 கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது.

மேலும் சந்திரயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயன் 2 விண்ணில் செலுத்தப்படவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயன் 2 மற்றொரு நாள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories