இந்தியா

‘என்னையா காட்டிக்கொடுக்கற...’ : ஊழலை வெளிகொண்டு வந்த சமூக ஆர்வலரைச் சுட்டுக் கொன்ற முன்னாள் பா.ஜ.க எம்.பி

முன்னாள் பா.ஜ.க எம்.பி. டினு சோலாங்கிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது அகமதாபாத் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.

‘என்னையா காட்டிக்கொடுக்கற...’ : ஊழலை வெளிகொண்டு வந்த சமூக ஆர்வலரைச் சுட்டுக் கொன்ற முன்னாள் பா.ஜ.க எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பியாக பா.ஜ.க., வைச் சேர்ந்த டினு சோலாங்கி. ஜுனாகத் பகுதிக்கு அருகே உள்ள கிர் சிங்கங்கள் சரணாலாயத்தில் சட்டத்துக்கு புறம்பாக சுரங்கத் தொழிலில் டினு சோலாங்கி ஈடுபட்டதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அமித் ஜேத்வா என்ற நபர் அம்பலப்படுத்தினார்.

இதனையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தின் வழக்குத் தொடர்ந்த அமித் ஜேத்வாவை கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நீதிமன்றத்துக்கு வெளியே மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்த கொலைக்கும், டினு சோலாங்கிக்கும் தொடர்பில்லை என குஜராத் போலீசார் தெரிவித்தனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஆர்.டி.ஐ. ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

அகமதாபாத் சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் கடந்த 2016ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், டினு உள்ளிட்ட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், ஆர்.டி.ஐ ஆர்வலர் அமித் ஜேத்வா கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 7ம் தேதி டினி சோலாங்கி மற்றும் 7 பேரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இன்று அவர்கள் எட்டுப் பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories