சாலை, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு 1 ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5% வரி விதிக்கப்படும், தங்கத்துக்கான கலால் வரி 10 சதவிகிதத்தில் இருந்து 12.5% உயர்த்தப்படும்
ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிப்பு கிடையாது என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். 5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி விதிக்கப்படும்.
ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கணக்கில் இருந்து ரொக்கமாக எடுத்தால் 2% பிடித்தம் செய்யப்படும் என அறிவிப்பு
பான் அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் எண்ணை கொண்டு வருமான வரி தாக்கல் செய்யலாம் என பட்ஜெட்டில் அறிவிப்பு
2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவதையொட்டி பங்குச்சந்தை சரிவடைந்தன.
அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2024ம் ஆண்டுக்குள் குடிநீர், கழிவுநீர் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிப்பதற்கு ஏதுவாக உலக தர உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க ரூ.400 கோடி ஒதுக்கப்படும்.
உயர் கல்வியை மேம்படுத்துவதற்காக உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இந்தியாவுக்கு திரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் எண் வழங்கப்படும். தற்போது உள்ள 6 மாத கால காத்திருப்பு நீக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றுவதற்காக ரோபோக்கள் உள்ளிட்ட நவீன இயந்திரங்களை பயன்படுத்தப்படும் என்றும், இந்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தனியாக தொலைக்காட்சிகள் தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமப்
இந்திய பொருளாதாரம் தற்போது 2.7 ட்ரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதனை 5 ட்ரில்லியன் டாலர்களாக்குவதே நமது இலக்கு. பொருளாதாரமும், தேசிய பாதுகாப்புக்கே அரசு முன்னுரிமை அளிக்கும் என மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு
2018-19ம் நிதியாண்டில் அந்நிய முதலீடு வலுவான நிலையில் உள்ளது. வரும் நிதியாண்டுகளில் ஊடகத்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் அந்நிய முதலீட்ட அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
காப்பீட்டு துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் சபாநாயாகர் ஓம் பிர்லா முன்னிலை தாக்கல் செய்து வருகிறார் இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக லெதர் சூட்கேஸ் இல்லாமல் சிவப்பு நிற துணியால் மூடப்பட்ட லெட்ஜெரில் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்