இந்தியா

மக்களுக்கு விலை உயர்வை மட்டுமே அளித்துள்ளது பட்ஜெட் - திருமாவளவன், திருநாவுக்கரசர் பேட்டி!

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட் என திருநாவுக்கரசரும், திருமாவளவனும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மக்களுக்கு விலை உயர்வை மட்டுமே அளித்துள்ளது பட்ஜெட் - திருமாவளவன், திருநாவுக்கரசர் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

17-வது அமைச்சரவையின் முதல் நிதிநிலை அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்ற அவையில் வாசித்தார்.

மத்திய பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு தேவையான சலுகைகள் என்று எதுவும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குறிப்பாக, 400 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டுக்கு வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு 25% மட்டுமே வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மக்களின் அன்றாடத் தேவையான பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எம்.பிக்களான திருநாவுக்கரசரும், திருமாவளவனும் டெல்லியில் கூட்டாக பேட்டியளித்துள்ளனர். அப்போது, இது மக்கள் விரோத பட்ஜெட் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.

தனியாருக்கு சலுகைகளையும், ஊக்கத்தையும் அளித்துவிட்டு, பாமர மக்களுக்கு பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை விதித்துள்ளது மத்திய பட்ஜெட். இதன்மூலம், விலைவாசி உயர்ந்தால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என திருநாவுக்கரசரும், திருமாவளவனும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories