இந்தியா

யூ-ட்யூப் சேனல் துவக்கிய இஸ்ரோ... விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க பதிவு செய்யலாம்!

“எங்கள் யூ-ட்யூப் சேனலை பின்தொடர்வதன் மூலம் உங்களது ஒரு கண்ணை வான் நோக்கியே வைத்திருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது இஸ்ரோ.

யூ-ட்யூப் சேனல் துவக்கிய இஸ்ரோ... விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க பதிவு செய்யலாம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலை நேற்று துவக்கியுள்ளது. இதுகுறித்து “எங்கள் யூ-ட்யூப் சேனலை பின்தொடர்வதன் மூலம் உங்களது ஒரு கண்ணை வான் நோக்கியே வைத்திருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது இஸ்ரோ.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ஏவுகணை மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.

விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிடுவதற்கு பார்வையாளர்கள் sdsc.shar.gov.in என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் தகவல்களை இன்று முதல் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் சிறப்பான பணிகளை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காக இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் -2 விண்ணில் ஏவப்படுவது குறித்த வீடியோக்கள் யூ-ட்யூப் சேனலில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் பக்கம் :

banner

Related Stories

Related Stories