இந்தியா

கழிவறை எங்கிருக்கிறது என கண்டுபிடிக்க உதவும் செயலி - கேரளாவின் பினராயி அரசு WOW முயற்சி!

கழிவறையை தேடி அல்லல் படாமல் இருக்க கேரள சுற்றுலாத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கழிவறை எங்கிருக்கிறது என கண்டுபிடிக்க உதவும் செயலி - கேரளாவின் பினராயி அரசு WOW முயற்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுற்றுலாவுக்கு செல்வோராக இருக்கட்டும், மாநகரில் வேலைக்கு செல்வோராக இருக்கட்டும், பொது இடங்களில் அவசர தேவைக்காக கழிவறைகளை தேடிக் கண்டுப்பிடிப்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். அதுவும் கழிவறைகள் இல்லாத பகுதிகள் என்றால் அதைக்காட்டிலும் பெரிய சிரமம்.

எனவே இதுபோன்ற அசவுகரியங்களை தடுக்கும் வகையில் கேரள சுற்றுலாத்துறை பாராட்டுக்குரிய முயற்சி ஒன்றை செய்துள்ளது. கேரளாவுக்கு சுற்றுலாவுக்கு வரும் மக்களுக்காக பிரத்யேகமாக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்து அருகில் கழிவறை எங்கு உள்ளது என அறிந்துக்கொள்ளலாம்.

கழிவறை எங்கிருக்கிறது என கண்டுபிடிக்க உதவும் செயலி - கேரளாவின் பினராயி அரசு WOW முயற்சி!

கழிவறை, இந்திய முறையிலா அல்லது மேற்கத்திய ச்டைலில் உள்ளதா என்பதைக் கூட அந்த செயலியின் மூலம் அறிந்துக்கொள்ள முடியும். 700க்கும் மேற்பட்ட கழிவறைகள் இருக்கும் இடத்தை அந்த செயலியில் இப்போது தெரிந்து கொள்ளலாம். செயலி மட்டுமில்லாமல் கேரள சுற்றுலாத்துறையின் இணையதளம் வாயிலாகவும் தெரிந்துக்கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு வசதிகள் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருக்கும் இந்த வசதியை முதன்முதலாக இந்தியாவில் கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories