இந்தியா

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம் !

தமிழக மக்களை தரக்குறைவாக பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களை கண்டித்து புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த ஞாயிறன்று தந்து த்விட்டேர் பக்கத்தில் சென்னை குடிநீர் தட்டுப்பாடு குறித்து பதிவிட்டார். அதில், 'இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. இதே நகரம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளத்தில் முழ்கியது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகு முறையும்கூட காரணமாக உள்ளது'' என்று விமர்சனம் செய்துள்ளார்.

கிரண்பேடியின் கருத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது தமிழக மக்களை கொச்சைபடுத்தும் விதமாக அவரது கருத்து இருக்கிறது என்றும், இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கவர்னர் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க மாநில செயலாளர் சிவா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிரண்பேடி மன்னிப்பு கேட்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

banner

Related Stories

Related Stories