இந்தியா

மாவட்ட நீதிபதிகளை இனி மத்திய அரசே நியமிக்கும்? நீதித்துறையையும் விட்டுவைக்காத மோடி அரசு!

மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகளையும் தேசிய அளவில் தேர்வு செய்து பணி நியமனம் செய்வதற்காக ‘அகில இந்திய நீதித்துறை தேர்வாணையம்’ அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாவட்ட நீதிபதிகளை இனி மத்திய அரசே நியமிக்கும்? நீதித்துறையையும் விட்டுவைக்காத மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை தேசிய குடிமைப் பணிக்கான அதிகாரிகள், ‘யுபிஎஸ்சி’ எனப்படும் ‘மத்திய பணியாளர் தேர்வாணையம்’ மூலம் தேர்வு நடத்தி நியமனம் செய்யப்படுகின்றனர்.

அதேபோல், நீதித்துறையில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘கொலிஜியம்’ என்ற அமைப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர். அதே நேரம், மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகளை உயர் நீதிமன்றத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

அதற்கு கீழ் உள்ள உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல், நடுவர்கள் போன்ற கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மாநில தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு மாநில கவர்னரால் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனாலும், அவர்களை கண்காணிக்கும் அதிகாரமும், பதவி நீக்கும் அதிகாரமும் சம்மந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் கட்டுபாட்டில்தான் உள்ளது. அதில், மாநில அரசு தலையிடமுடியாது.

இந்த நிலைமையை சீர்குலைக்க மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க அரசு, மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகளை தேசிய அளவில் போட்டித் தேர்வு நடத்தி நியமிப்பதற்காக, ‘அகில இந்திய நீதித்துறை தேர்வாணையம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளது.

மாவட்ட நீதிபதிகளை இனி மத்திய அரசே நியமிக்கும்? நீதித்துறையையும் விட்டுவைக்காத மோடி அரசு!

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி அனைத்து மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்றங்களுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடந்த 19ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இந்த திட்டம் பற்றிய தங்கள் கருத்துகள், ஆலோசனைகள், ஆட்சேபனைகளை மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம், ஒரே குடும்ப அட்டை திட்டம், மும்மொழி திட்டம் போன்றவை மூலம் மாநிலங்களின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி எடுத்துவருகிறது.

இந்நிலையில், மாவட்ட நீதிமன்ற நியமனங்களையும் தேசிய அளவில் நடத்த மத்திய அரசு முயற்சிப்பது, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல் என பல்வேறு மாநிலங்கள், கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மாவட்ட நீதிபதிகளில் 4ல் ஒருபகுதியினரை மத்திய அரசே தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் உள்ளதுபோல் நீதிபதிகள் தாங்கள் சார்ந்த மாநிலத்தில் பணியாற்ற முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு மத்திய அரசு நீதிபதிகளை தேர்வு செய்தால் மாநில மொழி தெரியாதவர்களும் நீதிமன்றத்தில் பணியாற்ற முடியும். இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என்பதுடன் மொழிரீதியாக நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு சூழல் உருவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories