இந்தியா

3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் கட்டணம் : கனரா வங்கி அறிவிப்பு!

மாதத்தில் 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனும் கனரா வங்கியின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் கட்டணம் : கனரா வங்கி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாட்டின் முன்னணி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்பு போதுமான அளவு பணத்தை கணக்கில் வைத்திருக்கவில்லை என்றால்தான் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கனரா வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் டெபாசிட் செய்ய கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. 50,000 க்கு மேற்பட்ட தொகைக்கு ஏற்றாற்போல ரூ. 50 முதல் ரூ. 2,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தற்போது ஒரு நபர் தனது கணக்கில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. கனரா வங்கியின் இந்த புதிய அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மாதத்திற்கு 3 முறை மட்டுமே வங்கி கணக்கில் ரூ. 50,000 வரையில் இலவசமாக பணமாக டெபாசிட் செய்ய முடியும். அதன் பிறகு டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 1 ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், நேரடி பணப்பரிவர்த்தனையை குறைக்கவும், ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை வங்கி நிர்வாகம் எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories