தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி ஏற்றதும் பெரும்பாலான எம்.பி.க்கள் ‘தமிழ் வாழ்க’ என்ற கோஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் பெரியார், அம்பேத்கர், கலைஞர் புகழ் வாழ்க என்றும் கூறினார்கள்.
தமிழ்நாட்டு எம்.பி.க்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு தமிழை வாழ்த்திப் பேசியதற்கு வடமாநில எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘தமிழ் வாழ்க’ என்று தமிழக எம்.பி.க்கள் சொன்னபோதெல்லாம் அவர்கள் ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷமிட்டனர்.
இந்நிநிலையில், ட்விட்டரில் "தமிழ் வாழ்க" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.