இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின்!

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2006-ம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தன் சிங், லோகேஷ் ஷர்மா, மனோகர் நர்வாரியா மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோருக்கு மும்பை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது.

2006-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நாசிக் அருகே உள்ள மாலேகானில் ஹமீதியா மசூதிக்கு அருகே நடந்த குண்டு வெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரித்தபோது 9 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 9 பேருடன் தன் சிங், லோகேஷ் ஷர்மா, மனோகர் நர்வாரியா மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகிய நான்கு பேர் மீதும் புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நால்வரும் 2013-ம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்து வருகின்றனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின்!

இந்நிலையில், நீதிபதிகள் ஐ.ஏ.மஹந்தி மற்றும் ஏ.எம்.பட்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த நால்வருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ரூ.50,000 ரொக்கப் பிணையில் விடுவிக்கப்படுவதாகவும், சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆஜராகவேண்டும் எனவும் அவர்கள் இவ்வழக்கு தொடர்பான சாட்சிகளை தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிரக்யா சிங் தாக்கூர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories