இந்தியா

உ.பி-யில் பார் கவுன்சில் தலைவராக பெறுப்பெற்ற 2 நாளில் பெண் தலைவர் சுட்டுக்கொலை!

உத்தரபிரதேசத்தின் முதல் பெண் பார் கவுன்சில் தலைவராக தர்வேஷ் யாதவ் தேர்தெடுக்கப்பட்டார். அவர் தேர்வான 2 நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-யில் பார் கவுன்சில் தலைவராக பெறுப்பெற்ற 2 நாளில் பெண் தலைவர் சுட்டுக்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தரபிரதேச பார் கவுன்சிலுக்கான தேர்தல் கடந்த வாரம் ஜூன் 9ம் தேதி தலைநகர் பிரயாக்ராஜில் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட ஹரிஷங்கர் என்பவரும், தர்வேஷ் யாதவ் என்ற பெண்ணும் சம அளவு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

இதன் காரணமாக தலைவர் பதவியில் இருவருமே இருக்கலாம். அதாவது, முதல் 6 மாதத்திற்கு தர்வேஷ் யாதவும், அடுத்த 6 மாதங்களுக்கு ஹரி ஷங்கரும் பதவி வகிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தர்வேஷ் யாதவ் உத்தரபிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பை பெற்றார். இதையடுத்து தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட தர்வேஷ் யாதவுக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அவர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி நடைபெறும் பொழுது தர்வேஷ் மனிஷ் சர்மா என்னும் வழக்கறிஞர் பார் கவுன்சில் தலைவர் தர்வேஷ் யாதவை குறி வைத்து தூப்பாக்கியால் சுட்டுள்ளார். தொடர்ந்து அவர் சுட்டாதில் 3 குண்டுகள் அவரின் மீது பாய்ந்தாது. அதில் ஒரு குண்டு அவரின் நெற்றியை தாக்கியது. இதில் அந்த இடத்திலேயே அவர் கிழே விழுந்து உயிரிழந்தார்.

பின்னர் வழக்கறிஞர் மனிஷ் சர்மா தன்னை தானே சுட்டுக்கொண்டார். அவருக்கு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரனை நடைபெற்றுவருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைவராக பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் நீதிமன்றத்திலேயே சக வழக்கறிஞரால் பார் கவுன்சில் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories