இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டுள்ளது- பொருளாதார ஆலோசகர் தகவல்!

கடந்த 2011- 12ம் ஆண்டு முதல் 2016-17ம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சியானது 7% பதில் வெறும் 4.5% மட்டுமே வளர்ந்துள்ளதாக இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டுள்ளது- பொருளாதார ஆலோசகர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய புள்ளியியல் அலுவலகம் 2011-12 ம் ஆண்டிலிருந்து 2016-17 ம் ஆண்டு வரை பொருளாதார வளர்ச்சி குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. அதாவது, இதற்கு முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.98 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக புள்ளி விவரத்துடன் விளக்கியது.

இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இந்தியாவின் ஜி.டி.பி கணக்கு புதிராக இருக்கிறது எனவும் மிகையாகக் கணிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இவர் வெளியிட்டுள்ள தனது ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Global Domestic Product) பற்றிய தனது விரிவான பார்வைகளை முன்வைத்துள்ளார்.

அந்தக் கட்டுரையில், “ பொருளாதார வளர்ச்சியானது 2004-05 வருட அடிப்படையில் கணக்கிடப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென்று 2011-12 ம் ஆண்டு அடிப்படையில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது வெறும் ஒப்பிடுதலுக்கு மட்டுமே சரியாகும். ஆனால் உண்மையில் இதைக் கொண்டு நாட்டின் மொத்த வளர்ச்சியையும் கணக்கிட முடியாது.

பழைய கணக்கெடுப்பை கொண்டு ஒப்பிடுகையில் தற்போது வேலையின்மை குறைந்துள்ளது. வேலையின்மை முக்கிய வளர்ச்சியை பெருமளவில் குறைக்கும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இதனால் பொருளாதார வளர்ச்சியில் தனிமனித வளர்ச்சி என்பது பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 4.5% மட்டுமே இருக்கும். 3.5% முதல் 5.5% வரை வேண்டுமானால் இருக்கலாம் ஆனால், 6.9% என்பது மிகைக்கணிப்பு ” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories