ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஆளும்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டிடீபி) படு தோல்வி அடைந்தது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் உள்ள தனது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் புதிய அரசின் நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அவர் கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட ரீதியாக ஆலோசனை நடத்த வேண்டும். தேர்தல் தோல்வியில் துவண்டு விடாமல் இருக்குமாறு தொண்டர்களுக்கு அந்த மாவட்ட தலைவர்கள் மூலம் ஆலோசனை வழங்க வேண்டும் எனக் கூறினார்.