இந்தியா

தமிழகத்தை அடுத்து மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கிறது இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு!

மும்மொழிக் கொள்கை என்பதின் பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசின் திட்டத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

தமிழகத்தை அடுத்து மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கிறது இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு தான் முழு ஆதரவு கொடுப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அனைத்து மாநிலங்களும் தனித்தன்மையும், மொழிகளும் உள்ளது. மாநில உரிமைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என மம்தா கூறியுள்ளார்.

இதனை உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும். அதேபோல், மாநிலங்களின் அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தாய்மொழியான வங்க மொழியை தான் மிகவும் நேசிப்பதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories