இந்தியா

“எந்த வடமாநிலத்தவராவது தமிழ், மலையாளத்தைக் கற்றுக் கொள்கிறார்களா?” - சசி தரூர் கேள்வி!

எந்த வடமாநிலத்தவராவது தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சசி தரூர்.

“எந்த வடமாநிலத்தவராவது தமிழ், மலையாளத்தைக் கற்றுக் கொள்கிறார்களா?” - சசி தரூர் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய அரசு பரிந்துரைத்துள்ள மும்மொழிக் கொள்கை வரைவுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலிமையான கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி-யுமான சசி தரூர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மும்மொழிக் கொள்கை பரிந்துரை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாவது இரண்டாவது மொழியாக இந்தியைக் கற்ற்க்கொள்கிறார்கள். ஆனால், வட இந்திய மாணவர்கள் யாரேனும் தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், மும்மொழிக் கொள்கையை மாநிலங்களின் மீது திணிக்காமல் மாநிலங்களுக்கு ஏற்றவாறு செயல்படுத்துவது குறித்து சிறப்பாகச் சிந்திக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories