பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டும் ரூ.6000 திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதேபோல், விவசாயிகளுக்கான பென்சன் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வியாபாரிகளுக்கான ஓய்வூதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 1.50 கோடிக்கு கீழ் ஜி.எஸ்.டி. செலுத்துவோர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்றும், இதில் பயன்பெற விரும்புவோர் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடாளுமன்றக்கூட்டத்தொடர் ஜூன் 17ம் தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் என்றார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூன் 17 மற்றும் 18ம் தேதிகளில் பதவியேற்றுக்கொள்வார்கள்.
ஜூன் 19ம் தேதி நாடாளுமன்ற அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன் பிறகு ஜூன் 20ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.
அதனையடுத்து ஜூலை 5ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.