நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பா.ஜ.க கூட்டணியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களிடையே கடந்த 25ம் தேதி உரையாற்றிய மோடி, சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை பெரும் வகையில் அனைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
ஆனால், மோடி பேசிய சுவடு மறைவதற்குள், நாடுமுழுவதும் உள்ள தலித், பழங்குடியினர்கள் மற்றும் சிறுபான்மையினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன
மத்திய பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பெண் உள்ளிட்ட 3 பேர் மீது பசுக்காவலர்கள் எனும் மதவாத கும்பல் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது
இதேபோல், பீகார் மாநிலத்தில் முகமது காசீம் என்று பெயரை வைத்திருந்த காரணத்திற்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த கும்பல் துப்பாக்கியால் தாக்கியுள்ளது.
இந்த கொடுமைகளுக்கும் மேலாக, ஹரியானாவில் “பாரத் மாதாகி ஜே” என்று கூறாததால் இஸ்லாமியர் ஒருவரை மதவெறிபிடித்த இந்துத்துவா அமைப்பு மனிதாபிமானமே இல்லாமல் தாக்கியுள்ளது.
இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு, மோடியின் சொந்த ஊரான குஜராத்தில், சர்ச்சைக்குரிய கருத்தை முகநூலில் பதிவிட்ட தலித் தம்பதியை 200க்கும் மேற்பட்ட உயர் சாதியினர் தாக்கியுள்ளனர்.
மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில், 2 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டிறைச்சி உண்ணும் உரிமை குறித்து முகநூலில் பதிவிட்ட ஆசிரியர் ஒருவரை தற்போது கைது செய்துள்ளனர்.
தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 5 நாட்களில் 5 வெவ்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையும் அளித்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத, பாசிச கட்சிகளால் நாடு எத்தனை துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்க இருக்கிறதோ என்று எதிர்க்கட்சிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.