இந்தியாவின் முதல் பிரதமாரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெல்லி சாந்திவனில் உள்ள நேருவின் நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அவர்களை அடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரியும், காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா ஆகியோரும் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது, இந்தியாவில் வலிமையான, சுதந்திரமான, நவீன நிறுவனங்களை உருவாக்குவதில் நேருவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது நினைவுக்கூரத்தக்கது. மேலும், அவரின் பங்களிப்பு 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயகத்தை தக்க வைத்துக்கொள்ள உதவியிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.