இந்தியா

குஜராத் தீ விபத்து - எட்டு மாணவர்களின் உயிரை காப்பாற்றிய வியாபாரி !

கேதன் ஜோர்வத்யா என்பவர் தீப்பிடித்த கட்டிடத்தின் ஜன்னல் வழியாக கீழே குதிக்கும் மாணவர்களை பிடித்து பத்திரமாக நிற்க கீழே இறக்கினார். இது போல் எட்டு மாணவர்களின் உயிரை காப்பாற்றினார்.

குஜராத் தீ விபத்து - எட்டு மாணவர்களின் உயிரை காப்பாற்றிய வியாபாரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்த்தானா என்ற இடத்தில் டியூசன் செண்டர் இயங்கி வந்துள்ளது. இந்த டியூசன் செண்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினம் வந்து படித்து வந்தனர். இந்த டியூசன் செண்டரில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

கட்டிடத்தில் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்ததால் மாணவர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். சிலர் ஜன்னல் மீது அமர்ந்தபடி உதவி கேட்டு அலறினார்கள்.

தீ விபத்து நடந்த கட்டிடத்தின் அருகில் வசித்து வந்த வியாபாரியான கேதன் ஜோர்வத்யா என்பவர் தீ விபத்தை பற்றி அறிந்ததும் வீட்டில் இருந்து ஓடி சென்றார். கட்டிடத்தில் இருந்து மாணவர்கள் கீழே குதிப்பதை பார்த்தார். உடனே ஏணி மூலம் ஏறி இரண்டாவது மாடியின் பக்கவாட்டில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே குதிக்கும் மாணவர்களை பிடித்து பத்திரமாக நிற்க வைத்தார். பின்னர் அவர்களை ஏணி மூலம் கீழே இறக்கினார்.

இது போல் எட்டு மாணவர்களின் உயிரை காப்பாற்றினார். எட்டு பேரின் உயிரை காப்பாற்றிய கேதன் ஜோர்வத்யாவுக்கு பாராட்டுகள் குவிகிறது.

இதுகுறித்து அவர் கூறும் போது, "தீப்பிடித்து எரிவதை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுக்கவும், புகைப் படம் எடுக்கவும்தான் மும்முரமாக இருந்தனர். மாணவர்களிடம் தீயணைப்பு வீரர்கள் கீழே குதிக்க வேண்டாம் என்றும் நவீன ஏணி வரும்வரை காத்திருங்கள் என்று கூறினர். ஆனால் ஏணி வர தாமதம் ஆனது. உடனே நான் 2-வது மாடி பக்கவாட்டில் ஏறி நின்று மாணவர்களை காப்பாற்ற முடிவு செய்தேன். 8 மாணவர்களுக்கும் உதவி செய்து காப்பாற்றிய பிறகு சிறுமி ஒருவர் ஜன்னல் வழியாக கீழே குதிக்க முயன்றார். அவரிடம் காத்து இருக்குமாறு கூறினேன்.ஆனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டாள்" எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories