உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 4 பணியிடங்களுக்கு சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா, எஸ்.ஆர். கவாப் ஆகிய 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 27 பேராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
அனிருதா போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கி, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்.
ஏ.எஸ்.போபண்ணா கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கி, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்துள்ளார்.
நீதிபதி கவாய் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், நீதிபதி சூரியகாந்த், இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 4 பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகள் நான்கு பேர் பதவியேற்றனர். அவர்கள் நால்வருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.